e8a3ed89e2d82384ea0dc9f1e27b85f7
மணப்பெண் அலங்காரம்

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும்?

மணமகள், மேக்கப் இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். தரமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம். மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி.

மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும். குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும். முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம்.

இது, முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும்.

மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம்.e8a3ed89e2d82384ea0dc9f1e27b85f7

Related posts

மணப்பெண் அலங்காரம்..

nathan

மணப்பெண் அலங்காரம்

nathan

திருமண காலணிகளுக்கான வழிகாட்டி: shoes for bride

nathan

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்

nathan

invitations for weddings :ஒவ்வொரு வகை திருமண அழைப்பிதழ்

nathan

தங்கமாய் மின்னும் மணப்பெண் சேலைகள்

nathan

brides mother dresses | மணமகளின் தாய் ஆடைகள்: சரியான பொருத்தத்தைக் கண்டறிவதற்கான வழிகாட்டி

nathan

பல்வேறு வகையான யடணாகம்

nathan

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan