27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
fhghgj
சரும பராமரிப்பு

பாத வெடிப்பு வராமல் தடுப்பது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை. தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.

நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது. பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் போன்றவற்றைவும் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த வைத்தியம் போதுமானது.

அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான ‘‌ஷூ’ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

Related posts

சருமம் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள் !!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க…

nathan

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

nathan

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பது எவ்வாறு?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஹீரோ மாதிரி நீங்க அழகாகவும் நல்ல கவர்ச்சியான சருமத்தை பெறவும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வர இதை செய்து வாருங்கள்!…

sangika

சூப்பர் டிப்ஸ்! வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?

nathan