28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
17 1437119095 afghani chicken pulao
அசைவ வகைகள்

ஆஃப்கானி சிக்கன் புலாவ்: ரம்ஜான் ரெசிபி

சிக்கன் புலாவ் சிறிது செய்யலாம் என்று நினைத்தால், ஆஃப்கானி சிக்கன் புலாவ் செய்யுங்கள். இது ஆஃப்கானிஸ்தானில் மிகவும் பிரபலமானது. இந்த சிக்கன் புலாவ் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இதன் சுவை வித்தியாசமானதாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த ஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, உங்கள் வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


17 1437119095 afghani chicken pulao
தேவையான பொருட்கள்:

அரிசி – 3 கப்
சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் – 3 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2-3 (நறுக்கியது)
பூண்டு – 4-5 பல் (நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பட்டை – 2 துண்டு
பச்சை ஏலக்காய் – 8
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
தண்ணீர் – 5 1/2 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய கேரட் – சிறிது
உலர் திராட்சை – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, மல்லி, ஏலக்காய், உப்பு மற்றும் 5 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு சிக்கன் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, அந்த நீரை வடிகட்டி, தனியாக 5 கப் சிக்கன் வேக வைத்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதப்பி, பின் அதில் சிக்கன் துண்டுகள், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் சிக்கன் வேக வைத்த நீர் மற்றும் அரிசியைக் கழுவிப் போட்டு, உப்பு சிறிது சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில் சாதத்தை வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் வற்றி, சாதம் வெந்ததும், அதில் உலர் திராட்சை மற்றும் துருவிய கேரட் தூவி அலங்கரித்தால், ஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெடி!!!

Related posts

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

கணவாய் மீன் வறுவல்

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan

சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan