ஸ்ட்ராபெர்ரி சீசன் ஆரம்பித்துவிட்டதால், அதனை வாங்கி அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்காகவோ அல்லது ஸ்மூத்தியாகவோ செய்து குடிக்கலாம். இது கோடையில் வெயிலின் தாகத்தைத் தணிக்கும் சிறந்த பானம். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சரி, இப்போது ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி – 10
கெட்டித் தயிர் – 1 கப்
பால் – 1/4 கப்
சர்க்கரை – 2-3 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெர்ரியின் இலைகளை நீக்கி, அதனை வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அதில் பால் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி ரெடி!!!