36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

பெற்றோர் குழந்தைகள் முன்னால் செய்யக்கூடாதவை

பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும், தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது. எனவே, குழந்தைகள் முன்பு என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

நீங்கள் குழந்தைகள் முன்னே மற்றவரை அடிப்பது. இது, குழந்தைகளின் மனதினுள் வன்முறை எண்ணத்தை வளர்த்துவிடும். எனவே இத்தகைய தவறை குழந்தைகள் முன்னால் செய்யாதீர்கள். குழந்தைகள் முன் அசிங்கமாக திட்டிக்கொள்ள வேண்டாம். இந்த செயல் குழந்தையின் மனதினுள் ஏதோ சாதாரண வார்த்தைகள் பதிவது போல பதிய ஆரம்பித்துவிடும். வளர வளர குழந்தைகளும் அந்த வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். அவர்கள் பேசுவதை வைத்து மட்டுமே அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என அறிய முடியும். இல்லையேல், அவர்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாய் உணர தொடங்கி, மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுவார்கள்.

குழந்தைகள் ஏதாவது கருத்து கூறும் போது, “பெரியமனுஷன் மாறி பேசாதே..” என்று ஒதுக்காமல் காதுக் கொடுத்து கேளுங்கள். அவர்கள் கூறும் கருத்து தவறாக இருந்தால், அது ஏன் தவறு, அதனால் பயன் ஏதுமில்லை என அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறுங்கள்.

மற்றவர் மத்தியில் குறைக்கூற வேண்டாம் மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் குழந்தையை குறைக் கூறாதீர்கள். இது, அவர்களை மனதளவில் பெரியதாய் பாதிக்கும். மற்றும், அவர்களுக்குள்ளே தங்களுக்கு திறமை ஏதும் இல்லை என்ற எண்ணம் அதிகரிக்க இது பெரிய காரணமாகிவிடும்.

Related posts

சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

nathan

சூப்பர் டிப்ஸ் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றி அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்த இத குடிங்க

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி

nathan

வீடுகளில் பாதுகாப்பிற்கு உதவும் பயோமெட்ரிக் கருவிகள்

nathan

பெண்களே உங்களுக்கு தெரியுமா ? குழந்தை பிறந்த 24 மணிநேரத்தில் என்னவெல்லாம் நடக்கும்!

nathan

தசை நார் கிழிவு தவிர்க்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளை படுதல் பிரச்னைக்கு வீட்டி வைத்தியம்

nathan

உங்கள் தோல்விக்கு மற்றவர் மீது பழி போட வேண்டாமே

nathan

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

nathan