36.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
paru 2142402f
அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள். 15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.

வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள். நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின்  மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.

Related posts

கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! கண்கருவளையம்ஆயுர்வேத_வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

nathan

16 வயதில் தனியாக நிற்கும் நடிகையின் மகள்!

nathan

இந்திய ஆண்களின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்! தொடர்ந்து படியுங்கள்

nathan

இந்த செயல்கள் தான் முகப்பருவை அதிகம் வரவழைக்கும்- உஷார்!

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan

நம்ப முடியலையே…உள்ளாடை இல்லாமல் வெள்ளை நிற உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

nathan

கசிந்த தகவல் ! இரவில் அடிக்கடி பிரபல நடிகை வீட்டுக்கு சென்று தொல்லைக்கொடுத்த தளபதி விஜய்!

nathan