27.5 C
Chennai
Friday, May 17, 2024
kitchen2 1654916f
சமையல் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம்
மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே.

இந்த வாசனையைப் போக்குவதற்காக ஊதுபத்தி பாவிப்பதற்கு நம்மவர் பலர் முனைவர். ஊது பத்தியானது துர்நாற்றத்தை உடன் ஓரளவு குறைக்கலாம், எனினும் நறுமணமும் துர்நாற்றமும் சிலசமயம் நாம் எதிர்பார்ப்பதற்கு எதிர் விளைவாகவும் அமையக்கூடும். இதைவிடக் குளிரான இலையுதிர்காலத்திலும், அடுத்து வரவிருக்கும் பனிக் காலத்திலும் இலகுவாகப் பல மணிநேரம் ஜன்னல், கதவுகளையும் திறந்து காற்றோட்டத்திற்கு விடமுடியாது.

எனவே தரித்திருக்கும் தர்ம சங்கட நாற்றத்தை சமயலறையிலிருந்து அகற்ற கறுவாப்பட்டை, கிராம்பு குற்றி வெறும் உலோகப் பாத்திரத்தில் கொதிக்க வைத்தால் அது நறுமணத்தைப் பரப்ப உதவும். அத்துடன் கோப்பி விதைகளை சற்று வாணலியில் வெப்பம் காட்டிச் சமையல் அடுப்பருகில் வைத்தாலும் அது விறகடுப்புக் கரி போன்று துர்நாற்றங்களையும் உறிஞ்சக்கூடியது.

வட அமெரிக்காவில் பனிப்பச்சை (WinterGreen) தைலம் தனையும் (Wholefoods, Natural foods) கடைகளில் பெற்று பஞ்சில் தோய்த்துக் குமிழி ஒன்றில் வைத்தால் அதுவும் மிதமான வாசனையை சமையலறைக்குத் தரும்

துப்பரவான துடைக்கும் துணி
உங்களின் துடைக்கும் துணிகளில் ஒன்றிரண்டைப் பாத்திரம் கழுவும் இயந்திரத்தின் (Dishwasher) மேல் தட்டில் (Upper Rack) கட்டிவிட்டீர்கள் என்றால், துணிகள் உடுப்புக்கள் கழுவும் சாதனத்தை நம்பி என்றும் இருக்கத் தேவையில்லை.

மேலும் இது அதிகக் கை துடைக்கும் பேப்பர் துவாய்களைப் (reduce paper towel use) பாவிப்பதையும் குறைக்க உதவும்.

உடைந்த கண்ணாடித்துண்டுகளை அகற்றுவது எப்படி?
குழந்தைகளும், குழந்தை மனது கொண்டவர்களும் கண்ணாடிப்பொருட்கள் உடைப்பது சகசமான விடயம். அதை முற்றாக நிலத்தில் இருந்து அள்ளுவதோ, அகற்றுவதோ சற்று அலுப்புத்தரும் விடயம்.

சிறு கண்ணாடித்துண்டுகளை அகற்ற சாதாரண ரோட்டி, இலங்கையர் பாண் என்று சொல்லும் (Bread) துண்டுகளைப் பாவிக்கலாம். அதே போன்று உலர்ந்த தேங்காய்த் துருவலையும் பாவிக்கலாம்.

உடைந்த முட்டையை ஒழிப்பது எப்படி?
தற்செயலாக சமையலைறையில் முட்டை உடைந்து சிந்தி விட்டதா? அதன் தலையிடியோ தனி. முட்டையானது அதில் காணப்படும் புரதங்கள் (Proteins) சிலவற்றினால் காற்றில் உலர வெடுக்கு நாற்றம் தரக்கூடியது. எனவே அந்தப் புரதங்களை விலக்க மேசை உப்பை ஒட்டுமொத்தமாக முட்டை சிந்திய இடத்தில் குவித்து சிறிது நேரம் விட்டு, துடைக்கும் துணி, பேப்பரினால் அழுத்தி எடுத்து அகற்றலாம்.

உப்பானது முட்டைப் புரதங்களை உடன் வெப்பமின்றியும் சமைக்க வல்லது. எனவே உப்பு ஒவ்வாத நாற்றத்தை ஒழித்து விடும்.

மின்சாரப் பொரியல் அடுப்பை (Electric Fryer) துப்பரவு செய்தல்
தற்பொழுது அடுக்கு மாடிக் குடியிருப்பு (Apartment) வாழ்க்கை வாழும் நம்மவரில் பலர் பலகாரம் பொரிக்க மின்சாரப் பொரியல் அடுப்பைப் பாவிப்பர். அதில் சமையல் பொழுது மணத்தைக் குறைக்க ஃபில்டர் (Filters) உண்டு. ஆயினும் நெடுநாளிற்கு உள்ளேயுள்ள பாத்திரத்தை விட்டு வைக்க முடியாது.

எனவே அதைத்துப்பரவு செய்ய எண்ணெய் படிந்த கலத்தை சுமார் 15 நிமிடங்கள் ஆப்பச் சோடா (Baking Soda) கலந்த நீரில் மூழ்க வைத்துப் பின்னர் துடைப்புத்துணி, பழைய துணியால் அழுத்தித் துடைத்து அடுத்து வெந்நீரில் அலசினால் பொரித்த எண்ணெய் மணம் போய் விடும்.

Related posts

மட்டன் சிக்கன் மசாலா பவுடர்

nathan

சுவையான பீட்ரூட் மசாலா தோசை

nathan

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

sangika

தக்காளி குழம்பு

nathan

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

சிலோன் சிக்கன் பரோட்டா…

nathan

மஞ்சள் வெங்காய சட்னி

nathan

சுவையான மாங்காய் சாம்பார்

nathan