31.2 C
Chennai
Sunday, May 18, 2025
ஆரோக்கியம்தொப்பை குறைய

தொப்பை குறைய பயிற்சி (beauty tips in tamil)

தொப்பை குறைய பயிற்சி
இப்போதுள்ள காலகட்டத்தில் தொப்பையை குறைக்க ஜிம்முக்கு செல்பவர்கள் தான் அதிகம். ஜிம்முக்கு போக நேரம் இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அந்த வகையில் வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சியை பார்க்கலாம். முதலில் சுவற்றிற்கு அருகில் படுத்துக்கொள்ளவும். தலை முதல் கால் வரை தரையில் இருக்கும்படியும், கால்கள் சுவற்றில் இருக்கும் படியும் (படத்தில் உள்ளபடி) படுக்கவும்.

கால்களை மடக்கால் சுவற்றில் நேராக நீட்டவும். பின்னர் மெதுவாக முன்புறமாக எழுந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும். பின்னர் இடது கையால் வலது கால் பாதத்தை தொட வேண்டும்.

இவ்வாறு ஆரம்பத்தில் ஒவ்வொரு கால்களுக்கும் 20 எண்ணிக்கையில் செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி முதலில் செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் தொப்பை சற்று குறைந்திருப்பதை காணலாம். முதுகு வலி உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த பயிற்சியை செய்ய கூடாது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உடற்பயிற்சி செய்வது எப்படி?

nathan

இதை ஒரு நிமிஷம் படிங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க.அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்?

nathan

முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…

sangika

ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

sangika

இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். …..

sangika

இத்தகைய பாதிப்புகளை முடிந்த வரை விரைவாக போக்குவது நல்லது….

sangika

மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள்….

sangika

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika