அழகும் சீனாவில் செய்யப்படுகிறது. சீனப்பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களின் சடங்குகளும், சிகிச்சைகளும் அவர்கள் தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது.
உங்களுக்கு சீனப் பெண்களின் அழகிற்கான ரகசியங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு அழகின் ரகசியங்கள் நேரடியாக சீனாவிலிருந்து.
ஒளிரும் முகத்தைப் பெறுவதற்கு…
சீனப் பெண்கள் ஒளிரும் முகத்திற்காக பேஸ் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, சிப்பி தூள், தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இக்கலவையை முகத்தில் பூசினால் தோல் வீக்கம் மற்றும் தோல் எரிச்சல் குணமாகும். மேலும் இளமையான தோலை பெற முத்துத் தூளை பயன்படுத்துகின்றனர். சிப்பி தூள் இந்தியாவில் எளிதாக கிடைக்காது. இருப்பினும் அதே பலன்களைப் பெற, நீங்கள் பேர்ல் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
இளமையான தோல் பெற…
சீன மக்கள் எடை குறைப்பதற்காக அதிக அளவு கிரீன் டீ குடிப்பார்கள். இது கேட்சின்கள் நிறைந்தது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், முதுமையை நீக்கும் பண்புகள், நோய் எதிர்ப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது. அதற்கு க்ரீன் டீ பேக்கை வெந்நீரில் 2-3 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு, பின் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும்.
நல்ல நிறம் பெற…
சீன பெண்கள் தங்கள் குறைபாடற்ற மற்றும் ஒளி வீசுகின்ற சருமம் போன்றவற்றால் அறியப்படுகின்றனர். இந்த பளபளக்கும் இளமையை பெற மூலிகை பேஸ்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் புதினா இலை பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தி வர உடனடி நிறத்தைப் பெறலாம்.
இயற்கை நிறமூட்டிகள்
சீனப் பெண்கள் தங்கள் நிறத்தை அதிகரிக்க அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். அரிசியை நன்கு ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து, அந்த நீரானது வெள்ளையாக மாறும் வரை ஊற வைக்க வேண்டும். பின் அதனை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து டோனராக பயன்படுத்தலாம். இது மிகவும் அற்புதமானது மற்றும் மலிவானது. இதனை 3-4 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
சரும சுருக்கம் மறைய…
சீனர்கள் மிருதுவான மற்றும் மென்மையான தோல் கொண்டவர்கள். அவர்கள் ஒளிரும் முகம் பெற முட்டையின் வெள்ளையை கொண்டு பேஸ் மாஸ்க் தயாரிக்கிறார்கள். முட்டையின் வெள்ளையானது உறுதியான தோலுக்கு உதவுகிறது. முட்டையின் வெள்ளையை சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் அதனை குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக அலசவும்.
கொழுகொழு கன்னங்கள்
சீனப் பெண்கள் உடல் பாகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும் என்று மிகவும் நம்புகிறார்கள். மேலும் சீன கலாச்சாரத்தில் முக மசாஜ் செய்வது பிரபலமான ஒன்றாகும். இது செல் மீளுருவாக்கத்தை அதிகரிக்கின்றது.