36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

ஆறே வாரங்களில் உடல் எடை குறைக்க மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள்!!

மீன் எண்ணெய் என்பது, மீனின் திசுக்களில் இருந்து இருந்து பிரித்தெடுக்கும் ஒன்றாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஈ.பி.ஏ (eicosapentaenoic acid) மற்றும் டி.எச்.எ (docosahexaenoic acid) போன்ற மூலப்பொருட்களை கொண்டுள்ளது.

மீன் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உடல் எடையை குறைக்க பயனளிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், தசைக்கு வலிமையும் அளிக்கிறது. இதனால், உடல் சக்தியும் அதிகரிக்கிறது.

கொழுப்பை கரைக்க

மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஓர் ஆய்வில், மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் தினமும் உட்கொள்வதால் ஆறு வாரங்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடிகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தசை வலிமை

மேலும் தினமும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உட்கொள்வதால் தசையின் வலிமை அதிகரிக்கிறது. மேலும் இதற்கேற்ற உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியது அவசியம்.

பசியை குறைக்கும்

மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள், உணவு இடைவேளைகளுக்கு மத்தியில் ஏற்படும் அதிகப்படியான பசியை குறைக்கிறது. இதனால் உடலில் தேவையின்றி சேரும் கலோரிகளை தடுத்து, உடல் எடை அதிகரிக்காமல் செய்ய முடியும்.

பயனுள்ள டயட்

மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உங்கள் டயட் மற்றும் உடற்பயிற்சியை பயனுள்ளதாக மாற்றுகிறது. அதிகமான பசியை குறைத்து, தசை வலிமையை அதிகரித்து டயட்டை பயனுள்ளதாக மாற்றுகிறது.

கொழுப்பு சேமிப்பு

மேலும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள், உடலில் சேமிப்பாகும் கொழுப்பை குறைக்கிறது. இதனால் நீங்கள் நல்ல உடற் தகுதியுடன் இருக்க இது உதவுகிறது.

வாங்கும் போது கவனிக்க வேண்டியது

ஓர் நல்ல மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் 750 mg EPA மற்றும் DHA இருக்கும். மேலும் இதிலிருக்கும் ஒமேகா 3s தான் பல நன்மைகளை தருகிறது.

உட்கொள்ளும் அளவு

2-3 கிராம் அளவு மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் தினமும் உட்கொண்டால் இரண்டு பவுண்ட் அளவு உடல் எடை குறைக்க முடியும். அதிகமாக உட்கொள்ள வேண்டாம், மேலும் இதை உட்கொள்ளும் போது சர்க்கரை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மற்றும் அதிகமாக மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உட்கொள்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

Related posts

மெலிதான உடல் வாகு வேண்டுமா?

nathan

இந்த ஜூஸை தினமும் இரண்டு வேளை என ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் போது உடலில் உண்டாக கூடிய மாற்றங்கள் என்னென்ன?

nathan

தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்

nathan

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவற்றை செய்யுங்கள்…..

sangika

அதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

nathan

டாப் 10 எடை இழப்பிற்கான ஸ்மூத்தீஸ் வகைகளும் அதன் செய்முறைகளும்,,

nathan

உங்களுக்கு தெரியுமா சும்மா உட்கார்ந்திருக்கும் போது இந்த உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறைந்துவிடும்!

nathan