29.2 C
Chennai
Friday, Jul 25, 2025
22 61e6385c5
மருத்துவ குறிப்பு

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்றாக இருக்கின்றது.

எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

அதிலும் தினமும் துளசி இலை கொதிக்க வைத்து அதன் நீரை தொடர்ந்து பருகுவது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.

அந்தவகையில் தற்போது அதன் நன்மைகள் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்காது.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.
துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

Related posts

loose motion home remedies in tamil – லூஸ் மோஷன்

nathan

அவதி நிறைந்த அவசர பயணம்

nathan

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஊழியர்களுக்கு நிம்மதியான பணியிடம் அவசியம்

nathan

இதை முயன்று பாருங்கள்…உங்க விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைக்கும் தம்பதியா நீங்க???

nathan

உங்கள் பாதங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! மாதவிடாய் நிறுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

அரிசியா, கோதுமையா? – நீரிழிவு நோயாளிகள் எதை சாப்பிடலாம்

nathan