29.6 C
Chennai
Thursday, May 22, 2025
Tamil News tamil news Ridge Gourd for Diabetes SECVPF
Other News

பீர்க்கங்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அதில் பீர்க்கங்காயும் ஒன்றாகும்.

 

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

 

முழுத்தாவரமும் மருந்து இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

 

எனவே இதனை அன்றாடம் சேர்த்து கொள்வது நற்பயனை தரும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

  • பீர்க்கங்காய் சாறு எடுத்து 50 மில்லி வீதம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் மங்கலான பார்வையும் தெளிவாகும்.
  •  வாழைத்தண்டைப் போலவே பீர்க்கங்காயும் சிறுநீரகக் கற்களை வலியில்லாமல் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. பீர்க்கங்காய் கொடியின் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து, வெயலில் உலர்த்த வேண்டும். உலர்த்திய வேரை பொடி செய்து அந்த பொடியை தினமும் கால் ஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் வெளியேறிவிடும்.
  • வயிறு மந்தமாக இருக்கும்போது, பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் அரை லிட்டர் தண்ணீரும் கால் ஸ்பூன் மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துப் பின் வடிகட்டி அந்த நீரைக் குடிக்கலாம். காய் மட்டுமல்ல, இலை மற்றும் வேர் ஆகியவற்றின் சாறையும் அடிக்கடி 50 மில்லி அளவு வரை குடித்து வர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
  • பீர்க்கங்காயை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகுளாக நறுக்கி லேசாக உலர்த்தி எடுத்து, அதை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்ச வேண்டும். பீர்க்கங்காய் நிறம் முற்றிலும் மாறும் வரை காத்திருந்து பின் எண்ணையை வடிகட்டி வைத்துக் கொண்டு, அந்த எண்ணெயை தலைமுடிக்குத் தேய்த்து வந்தாலும், தலைக்கு குளிக்கும் முன் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை சிறிது சிறிதாகக் குறைந்த நரைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
  •  மூல நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வை இந்த பீர்க்கங்காய் தரும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மூல நோயைக் கட்டுப்படுத்துவதோடு மலச்சிக்கலையும் தீர்க்கும் தன்மை கொண்டது.
  • குறைந்த குளுக்கோஸ் அளவைக் கொண்ட காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவிலான பெப்டைடுகள், ஆல்கலைடுகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. உடல் பருமனையும் கட்டுப்படுத்துகிறது.

Related posts

பிக்பாஸ் துவங்க முன்னர் அதிரடியாக இடைநீக்கப்பட்ட நடிகர்!

nathan

நடிகர் புகழ் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர்..

nathan

உண்மையை உடைத்த நடிகை சுகன்யா.. விவாகரத்து செய்தது ஏன்!!

nathan

லாட்ஜுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

nathan

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT

nathan

சரித்திரம் படைத்த இந்தியா – வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் -3!

nathan

இரும்பு சத்தை அள்ளித்தரும் காளான் தேங்காய் பால் சூப்

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan