27.1 C
Chennai
Saturday, May 24, 2025
pimple
முகப் பராமரிப்பு

முகப்பரு, வீக்கம் போன்றவற்றை எளியமுறையில் போக்கனுமா?இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

பொதுவாக புதினா,ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். இதனை நாம் உணவின் வாசனைக்கு மட்டுமே புதினாவை உணவில் சேர்த்துப் பயன்படுத்தி வருகின்றோம்.

இது உணவிற்கு மட்டுமின்றி சரும பிரச்சினைகளை பல போக்க உதவுகின்றது.

 

குறிப்பாக சருமத்தை மென்மையாக்குகிறது. ஈரப்பதமாக்குகிறது. நிறத்தை பிரகாசமாக்குகிறது. சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்குகிறது.

 

அந்தவகையில் முகப்பருக்களை வடுக்கள் இல்லாமல் நீக்க புதினா இலைகளை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

10 முதல் 15 புதினா இலைகளை அரைத்து அதில் தேவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை உண்டாக்கும். இதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவிடவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுக்கவும். பேஸ்ட் அதிகமாக இருந்தால் பாட்டிலில் வைத்து சேமித்து 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் முகப்பருவை உண்டாக்கும் எண்ணெய் சுரப்பை குறைக்கிறது. பருக்களால் உண்டாகும் வீக்கத்தை சரி செய்கிறது.

புதினா இலைகள் 5- 10 , வேப்ப இலைகள் 5-10 , துளசி இலைகள் , 5-10 மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை அனைத்து இலைகளையும் ப்ளெண்டர் செய்து நன்றாக கலக்கவும். இந்த கலவையில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். பிறகு இந்த பேக் எடுத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இவை முகப்பரு மற்றும் வெடிப்புகளை தடுக்கின்றன. முகப்பருவால் உண்டாகும் வடுக்கள், வீக்கம், எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

புதினா இலைகள் – 10-15 இலைகள், வாழைப்பழம் – 1 , தேன்- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1-2 டீஸ்பூன் அனைத்தையும் ப்ளெண்டரில் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக்கவும். பிறகு முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இது பருக்களை தடுக்கும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

10-15 புதினா இலைகளை நசுக்கி அதன் சாறை தனியே எடுக்கவும். அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக்கி கலக்கவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது பருக்களுக்கு சிகிச்சையளிக்கின்றன மற்றும் முகத்தில் இருக்கும் கறைகளை நீக்குகின்றன.

புதினா இலைகள் மற்றும் 10-12 துளசி இலைகளை ஒன்றாக்கி பேஸ்ட் போல் அரைக்கவும். இதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் தடவி முகத்தில் 20 -30 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இது சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கரும்புள்ளியை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan

சருமத்திற்கு பூசணி தரும் அழகு!இதை முயன்று பாருங்கள்

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் உள்ள கருமை, தழும்பு மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்

nathan

ஆண்கள் இதையெல்லாம் செய்தால் முகம் முதல் நுனி பாதம் வரை அழகு கூடுமாம்..! இதை முயன்று பாருங்கள்..

nathan

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா?

nathan

அழகு குறிப்புகள்

nathan

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

இதுதான் சீக்ரெட்டாம்! கொரியாபொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி?

nathan