அழுக்குகளை நீக்குவதும், பித்த நீரை உற்பத்தி செய்வதும், ஊட்டசத்துக்களை சேகரித்து வைப்பதும் என இந்த முக்கிய செயல்திறனை செய்வதே கல்லீரல் தான்.
உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல் சேதமடைந்துள்ளது மற்றும் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தோல் எரிச்சல்
நீண்ட நாட்களாக உங்களின் தோலில் அரிப்பு ஏற்பட்டால் அதனை சாதரணமாக விட்டு விடாதீர்கள். இவை மிக பெரிய ஆபத்தை கூட உங்களுக்கு தரும். குறிப்பாக கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் உடலில் நீண்ட நாட்கள் அரிப்பு ஏற்படும். அத்துடன் சருமமும் வறண்டு போகும்.
கை, கால்களை கவனியுங்க
கை மற்றும் கால்களின் பாதங்களில் சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதேனும் நோய் வந்துள்ளது என்று அர்த்தம். எனவே, கைகளும், பாதங்களும் சிவப்பாக இருந்தால் கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.
மஞ்சள் காமாலை
கல்லீரல் பாதிப்புகளை உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறியாகும். இதே நிலை நீடித்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்
சிறுநீர்
சிறுநீரக பிரச்சினை இருந்தாலே நமது உடல் மோசமான நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். சிறுநீர் அடர்ந்து காணப்பட்டால் அவை கல்லீரல் நோயிற்கான அறிகுறியாக இருக்கும்.
கண்கள் பாதிப்பு
கண்கள் அதிக வறட்சியாகவோ அல்லது வாய் வறட்சியாகவோ இருந்தால் அவை பல பாதிப்புகளை நமக்கு தருகின்றது. கண்ணில் இது போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே நீண்ட நாட்கள் இருந்தால் அதிக பாதிப்பு உள்ளது என அர்த்தம். இது போன்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உடல் பருமன்
திடீரென்று உங்களின் உடல் எடை கூடினால் அது பல வகையான ஆபத்துகளுக்கான அறிகுறியும். அதில் முதன்மையானது இந்த கல்லீரல் பிரச்சினை. திடீரென்று உடல் எடை கூடுபவர்களுக்கு ரத்தத்தின் ஓட்டம் தடை செய்யப்பட கூடும். மேலும், சில சமயங்களில் இது தலைகீழாக நடக்கலாம்.