34.1 C
Chennai
Monday, Jul 28, 2025
29 2 brain2
மருத்துவ குறிப்பு

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

மனித மூளை என்பது இன்னமும் தீர்வு காண முடியாத மிகப்பெரிய மர்மமாகவே விளங்குகிறது. மருத்துவ அல்லது தத்துவ ரீதியான உலகத்தில், மனித மூளை மற்றும் மனதைப் பற்றி எழும் கேள்விகள், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தத்துவ ஞானிகளை கூட திணரடித்துள்ளது.

 

இன்று மூளையைப் பற்றிய சில திடுக்கிட வைக்கும் தகவல்களைத் தான் பார்க்கப் போகிறோம். மனித மூளையைப் பற்றிய இந்த தகவல்கள், அதிலுள்ள மர்மங்களை உங்கள் பார்வையின் முன் கொண்டு வரும். மேலும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய மர்மமாக மூளை விளங்குகிறது என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.

 

சரி, மனித மூளையைப் பற்றிய மர்மங்களுக்குள் நுழைந்து அதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? இதோ, மனித மூளையைப் பற்றிய சில விசித்திரமான தகவல்கள். தொடர்ந்து படியுங்கள்…

தூங்கும் போது மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படும்

இரவு தூங்கும் போது மூளை பெரியளவில் சுறுசுறுப்பாக இருக்காது என நீங்கள் நினைத்திருந்தால், அது தவறாகும். உண்மையிலேயே இரவில் தூங்கும் போது தான் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. மூளை என்ற உறுப்பு, நீங்கள் கனவு கண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அது தூங்கவே தூங்காது.

வருங்காலத்தை கணிப்பது

மூளையை பற்றிய மிகவும் விந்தையான தகவல்களில் இதுவும் ஒன்றாகும். இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை. மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளது. நாம் தூங்கும் போது, நம் கனவில் நடக்கும் சம்பவங்கள் உண்மை வாழ்க்கையிலேயே கூட நடக்கலாம். நடுப்பகுதி மூளை டோபமைன் அமைப்பு என்று அறியப்படும் மூளையின் ஒரு அமைப்பு, நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை அளிக்கும். இதனால் வருங்காலத்தை நம்மால் கணிக்க முடிகிறது.

மூளையின் பயன்பாட்டை 10% கூடுதலாக ஆண்கள் பயன்படுத்துகிறார்கள்

முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் எடுக்கும் சூழ்நிலைகள் வரும் போது, பெண்கள் ஏன் பெரும்பாலும் சொதப்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ, அதற்கான பதில்! ஆண்கள் பயன்படுத்துவதை மூளையை பெண்கள் சற்று குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களை விட கிட்டத்தட்ட 10% குறைவாகவே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வலி ஏற்பிகள் கிடையாது

மூளையைப் பற்றிய மற்றொரு விசித்திரமான தகவல் இது. நம் ஒட்டுமொத்த உடலிலும் வலியை உணர முடிந்த போதிலும், மூளை அந்த மாதிரி வலியை உணர்த்துவதில்லை. அதற்கு காரணம் மூளையுடன் வலி ஏற்பிகள் எதுவுமே கிடையாது. வலி ஏற்பிகளுக்கு இடம் இல்லை என்று கூட சொல்லலாம்.

தனித்துவம்

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவு திறனின் மிக முக்கிய பங்களிப்பாளர்களாக இது விளங்குகிறது. பெரிய அளவு மூளையை கொண்டவர்கள் தீர்வு காண்பதற்கும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்கும் சிறந்த திறன்களை கொண்டிருப்பார்கள்.

அதிக ஆற்றல் திறனை உட்கொள்ளும்

நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றல் திறனை உட்கொள்ளும் உறுப்பாக மூளை விளங்குகிறது.

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும்

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும். சொல்லப்போனால், டீனேஜர்கள் என்பவர்கள் பரிணாம வளர்ச்சியடையும் மூளையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

Related posts

கருப்பை பிரச்சனையால் அவதியா இலந்தை இலை

nathan

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

nathan

உடலில் மொத்த கொழுப்பும் கரைய வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா?

nathan

தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

nathan

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…

nathan

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா? உபயோகமான தகவல்கள்

nathan