31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

ஓட்ஸ் தக்காளி சூப்

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – கால் கப்
தக்காளி – 4
பூண்டு – 10 பல்
பேசில் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கு
குடமிளகாய் – 1 சிறியது
ஆலிவ் ஆயில் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :

* தக்காளி, பூண்டை 2 கப் தண்ணீர் ஊற்றி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* குடமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

* ஓட்சை கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

* தக்காளி கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொடித்த ஓட்சை போடவும்.

* மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி குடமிளகாயை 1 நிமிடம் வதக்கி தக்காளி கலவையில் சேர்க்கவும்.

* அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், பேசில் சேர்த்து 1 நிமிடம் வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான ஓட்ஸ் தக்காளி சூப் ரெடி

Related posts

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

nathan

டோம் யும் சூப்

nathan

வெஜிடபில் மில்க் சூப்

nathan

தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

nathan

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ??

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan