தீகாயத்தினாலோ, விபத்தினாலோ அல்லது அலர்ஜியினாலோ ஏற்படுகிறது.ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள் போன்றவை சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக மாறிவிடும்.
இதனை மறைய வைக்க எத்தனை க்ரீம்கள் பயன்படுத்தினாலும் எந்த ஒரு பலனும் இருப்பதில்லை.
ஆனால் அத்தகைய தழும்புகளையும் மறைய வைக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை சிலவகைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.
எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
கற்றாழையில் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் பளபளக்கும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
ஆலிவ் ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.