31.3 C
Chennai
Wednesday, Jul 30, 2025
village syle fish curry 05 1449312926
அசைவ வகைகள்

கிராமத்து மீன் குழம்பு

வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


village syle fish curry 05 1449312926
தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் – 10

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 8-10
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

Related posts

இறால் பஜ்ஜி

nathan

கிராமத்து ஸ்டைலில் கம கமக்கும் மீன் குழம்பு…

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

சுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

nathan

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு

nathan

கணவாய்ப் பொரியல்

nathan