36.1 C
Chennai
Wednesday, Jul 30, 2025
88 download 2
கால்கள் பராமரிப்பு

வீட்டில் கால் பாதங்களை பராமரிக்க

வறண்டு கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும். ஆகவே கால்களை எப்போதும் அழகாக பராமரிக்க பணத்தை செலவழிக்காமல், வீட்டிலேயே ஒரு ஸ்பா போன்று ரெடி செய்து கால்களை பராமரிக்கலாம்.

* பாதங்களுக்கு பராமரிப்பு செய்யும் போது, முதலில் கால் விரல்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட வேண்டும். அதற்கு அசிட்டோன் என்னும் நெயில் பாலிஷ் ரிமூவர் இருக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தினால், விரல்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.

* நெயில் பாலிஷை நீக்கியப் பின், நகங்களை வெட்டி விட வேண்டும். வேண்டுமென்றால் நகங்களை வெட்டலாம், ஏனெனில் நிறைய பெண்கள் நீளமான நகங்களைத் தான் விரும்புகின்றனர். ஆனால் நகங்களை வெட்டினால் தான் எந்த நோயும் வராமல் இருக்கும்.

ஏனெனில் தினமும் வெளியே செல்வதால், நகங்களில் அழுக்குகள் புகுந்துவிடும். இதனால் சருமத்தில் தொற்றுநோய்கள் ஏற்படும். ஆகவே நகங்கள் வேண்டுமென்றால் ஓரளவு மட்டும் வைத்துக் கொண்டால் போதுமானது.

* முதல் இரண்டு ஸ்டெப்ஸ் முடிந்ததும், கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை சேர்த்து, 8-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

* பிறகு மென்மையான பிரஸ் வைத்து பாதங்களை தேய்க்க வேண்டும். இந்த ஸ்டெப் தான் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இதனால் பாதங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளும் முற்றிலும் நீங்கிவிடும்.

* தேய்த்தப் பின்னர், மறுபடியும் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு, பாதங்களை அதில் 4-5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பாதங்களை தேய்த்தவுடன் ஊற வைப்பதால், பாதங்களில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறிவிடும்.

* பின் எலுமிச்சையை வைத்து, பாதங்களில் ஒரு முறை நன்கு தேய்த்துவிட வேண்டும். முக்கியமாக நகங்களில் தேய்க்க வேண்டும். இதனால் நகங்கள் நன்கு வெண்மையோடு காணப்படுவ்தோடு, கால்களும் சுத்தமாக இருக்கும்.

* அனைத்து ஸ்டெப்களும் முடிந்ததும், குளிர்ச்சியான நீரில், பாதங்களுக்கு சோப்பு போடாமல் கழுவ வேண்டும்.

* இறுதியாக பாதங்களுக்கு மாய்ச்சுரைசர் கிரீமை தடவ வேண்டும். வேண்டுமென்றால், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் அல்லது ஏதேனும் ஒரு பாடி லோசனை தடவலாம். இதனால் கால்கள் நன்கு ஈரப்பதத்துடன் பார்க்க அழகாக இருக்கும்.
88 download 2

Related posts

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்

nathan

சொரசொரவென கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

மிருதுவான பாதங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்..!!இத படிங்க!

nathan

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika

பாதங்களில் சுருக்கங்கள், வெடிப்பு போக வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

பித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்!

nathan

tips for soft feet-மென்மையான கால்களுக்கு

nathan

மழைக்காலத்தில் பாத பராமரிப்பு

nathan