2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி உலகின் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.
இந்நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு கவலையை ஏற்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது. அதாவது நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும்.
அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் உலகின் தட்பவெப்ப நிலை மாறி பிரம்மாண்டமான பனிப்பாறைகள் முற்றிலும் உருகும். இதனால் உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரித்து பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும் என்பதுடன் கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணமடைவார்கள் என்றும், எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும் (Mass level Death).
அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும். அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்றுவிடும். மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது, நவீனத்துவத்தின் முடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் , 2022 ஆம் ஆண்டில், பெரிய வானியல் நிகழ்வு நிகழும். அடுத்த ஆண்டில், ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள் ஒன்று, மிக அதிக வேகத்தில் வந்து பூமியைத் தாக்கும். அந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும். அந்த சிறுகோளின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமி உருவாகும்.
எனவே, கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் அவர் கணித்துள்ளாராம். அதுமட்டுமல்லாது 2022 ஆம் ஆண்டில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் மற்றும் ரோபோக்களே மனிதகுலத்திற்கு எதிரியாக மாறும் என்று நோஸ்ட்ராடாமஸின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரோபோக்கள் கட்டுப்பாடற்றதாக மாறி ஒட்டுமொத்த மனித இனத்தையும் பூமியில் இருந்து அழித்துவிடும்.
இதேவேளை நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி (Astrology Prediction), அடுத்த ஆண்டு பிரான்சுக்கும் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும், 2022 ஆம் ஆண்டில் ஏற்படும் பெரிய புயலினால், விவசாயத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு பஞ்சத்தினால் மனிதகுலமே துன்பப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மேலும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் எனவும், பிட்காயின், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை சொத்துகளாக கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்க டாலரில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். உலகில் பணவீக்கம் மிகவும் அதிகரிக்கும், இதன் காரணமாக மில்லியன் கணக்கான ஏழைகள் பட்டினியால் உயிரிழப்பார்கள் எனவும் பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது .