31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர்.

18 வயதான யுவதி இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியதுடன் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இப்பாதக செயலை செய்ய முயன்ற இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்ய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன் , அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related posts

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

nathan

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

சுவையான மிளகாய் சப்ஜி

nathan

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்…

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

nathan

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

காதை மிளிர வைப்பது எப்படி?

nathan