குழந்தைகள் வெளியே விளையாடும் போது பெற்றோர்கள் அவர்களை கண்காணித்து்க்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்று எடுத்துக்காட்டாகவும், அதிர்ச்சியளிக்கும் விதமாகவும் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜோ பிரென்னர் என்பவருக்கு 2 வயது மகன் வெளியே விளையாடச் சென்றுள்ளார்.
குறித்த தம்பதிகளும் மகன் வெளியே விளையாடும் நேரத்தில் வீட்டில் தனது வேலைகளை செய்து வந்துள்ளனர். நாளுக்கு நாள் மகனின் விளையாட்டு நேரம் அதிகரித்துள்ளது.
இதனை கவனித்த தந்தை, மகன் இவ்வளவு நேரம் யாருடன் விளையாடுகின்றான் என்று பின்தொடர்ந்து கவனித்துள்ளார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் குறித்த சிறுவன் ஆமை என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு மிகப்பெரிய முதலையுடன் சில நாட்கள் விளையாடியுள்ளதை அறிந்த தந்தைக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டதுடன், இவ்வளவு விளையாடியும் மகன் உயிரோடு இருப்பதை நினைத்து பயந்த அவர், மகனை விரைவாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஜோ பிரென்னர் வீட்டின் அருகில் உள்ள ஒரு கால்வாயில் இந்த முதலை தவறுதலாக மாட்டி கொண்ட நிலையில், குறித்த சிறுவன் ஆமை என்று நினைத்து அதனை வெளியே கொண்டுவதற்கு முயற்சித்துள்ளான். சிறுவன் அவ்வாறு செய்துள்ளதை நேரில் அவதானித்த தந்தை அதிர்ச்சியில் மீளவில்லை.
குறித்த சம்பவத்தினை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் உடனே வனவிலங்கு மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து முதலையை மீட்டு சென்றுள்ளனர்.