27.1 C
Chennai
Saturday, May 24, 2025
t 14
Other News

சுவையான இறால் முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

இறால் – 100 கிராம்

முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

தீபாவளி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

nathan

நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் உயிரிழந்த சம்பவம்!!

nathan

ஆர்.ஆர்.ஆரின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…!

nathan

ராப் பாடகர் விளக்கம் – மிருணாள் தாக்குருடன் காதலா?

nathan

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

படப்பிடிப்பில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற பிரதீப்…அசிங்கப்படுத்திய பிரபலம்

nathan

திருவண்ணாமலையில் நடிகர் ரவி

nathan

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

nathan

அன்னபூரணி படம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல

nathan