26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
31 1441003919 6 aloevera
பெண்கள் மருத்துவம்

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் கற்றாழை

வலி நிவாரணியாகவும், மலச்சிக்கலை போக்கவல்லதும், மாதவிலக்கு கோளாறை சரிசெய்யக் கூடிய தன்மை கொண்டதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் கோளாறை போக்க கூடியதும், வலி நிவாரணியாக பயன்தரக் கூடியதுமான சோற்று கற்றாழையின் பயன்களை அறிவோம்.

சோற்று கற்றாழையில் இருந்து எடுக்க கூடியது கரியபோளம். சோற்றுக் கற்றாழையை உடைத்தால் அதில் சாறு வடியும். இந்த சாறை தனியாக எடுத்து வைத்தால் மெழுகு போன்று இருக்கும். இதுவே கரியபோளம் ஆகிறது. கரியபோளத்தை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கரியபோளம், முருங்கை இலை, பனைவெல்லம், கருஞ்சீரகம்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்க கூடிய கரியபோளத்தை சுண்டக்காய் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கரியபோளத்தில் மண் இருக்கும் என்பதால், அதை நீர்விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும். அதனுடன் முருங்கை இலை, கால் ஸ்பூன் கருஞ்சீரகம், சிறிது பனைவெல்லம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதனால், மாதவிலக்கு சீராகும். மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும். இயற்கை கொடுத்த இனிமையான மருந்து. இது பக்க விளைவு இல்லாதது.

கரியபோளமானது கருப்பையை தூண்டக் கூடியது. சரிவர வராத மாதவிலக்கு பிரச்னை, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி ஆகியவற்றுக்கு தீர்வு ஏற்படும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும் அற்புத மருந்தாகிறது. வலி நிவாரணியாக பயன்படுகிறது. கரியபோளத்தை நீரில் காய்ச்சி மேல் பூச்சாக பூசும்போது வீக்கம் ம் மற்றும் வலி நீங்கும்.கரியபோளத்தை பயன்படுத்தி மலச்சிக்கல், நீர் சுருக்குக்கான மருந்து தயாரிக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்: கரியபோளம், சோம்பு, பனங்கற்கண்டு. சுண்டைக்காய் அளவுக்கு கரியபோளத்தை எடுத்து கரைத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். கரியபோளத்தை அதிகளவு பயன்படுத்தினால் கழிச்சல் உண்டாகும். எனவே, சுண்டக்காய் அளவுக்கே பயன்படுத்த வேண்டும். கரியபோள கரைசலுடன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்க வேண்டும். இதை குடித்துவந்தால் மலச்சிக்கல் சரியாகும். சிறுநீர் சுருக்கு, சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். சிறுநீரை வெளியேற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். கரியபோளம் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உடையது.

கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ரயில் கற்றாழை இலையை துண்டுகளாக்கி நீரில் இட்டு நன்றாக கொதிக்கவைத்து, ஆறவைத்து தலைக்கு தேய்த்து குளிப்பதனால் தலைமுடி கொட்டுவது குறையும். பொடுகுகள் வராது. கரியபோளத்தை நீரில் காய்ச்சி வடித்து, ஓரிரு சொட்டுகள் காதில் விடுவதால் காது வலி இல்லாமல் போகும். ஆனை கற்றாழை ரத்தத்தை சுத்தப்படுத்தும், தலைமுடி உதிர்வை தடுக்கும்.
madurai%2Bhrebal...jp.jpg00

Related posts

பருவத்தை அடையும் முன்பு ஏற்படும் முதல் மாற்றம் என்ன?

nathan

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

nathan

பெண்களின் கர்பத்தை தடுக்கும் நீர்க்கட்டிக்கு தீர்வு!

nathan

பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு

sangika

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

sangika

ஏன் தெரியுமா? குறிப்பாக பருவபெண்களுக்கு பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது

nathan

பிரா அணியும் இளம் பெண்களே எச்சரிக்கை.! அவசியம் படிக்கவும்..!!

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்துப்படி சில செய்யக்கூடாத செயல்கள் என்ன….?

nathan