தேவையான பொருட்கள்
இறச்சி – 500 கிராம் (எலும்பு நீக்கியது)
மோஜோ சாஸ் செய்ய
ஒலிவ எண்ணெய் – 1/4 கப்
ஓமம் – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்(நறுக்கியது)
சிவப்பு மிளகாய் – 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 4 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு சாறு – 3/4 கப்
ஜீரகத் தூள் – 1 மேஜைக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பர்கருக்கு
பர்கர் பன் – 5
வெங்காயம் – 1(பெரியதாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

நான் வீட்டில் தயாரித்த பர்கர் பன்னை பயன் படுத்தியுள்ளேன்

ஒரு பாத்திரத்தில் ஒலிவ எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்

பூண்டு சேர்க்கவும்

ஓமம் சேர்க்கவும்

சிவப்பு மிளகாய் சேர்க்கவும்

ஜீரகத்தூள் சேர்க்கவும்

நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

ஆரஞ்சு பழச் சாறு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சிறிது சாஸ் எடுத்து தனியே வைக்கவும்

பின்பு நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதனுடன் சேர்க்கவும்

பின்பு 2 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்

வோக்கை அடுப்பில் வைத்து சூடாக்கவும்

இறச்சித் துண்டுகளை சேர்க்கவும்

பொன்னிறமாகும் வரை கிளறவும்

பின்பு தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.பன் தக்காளி மற்றும் வெங்காயத்தினை வைத்து பொரித்தெடுக்கவும்

சிறிதளவு மோஜோ சாஸ் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்

பின்பு ஒரு தட்டில் பன் துண்டுகளை வைக்கவும்

ஒரு துண்டின் மீது தக்காளி மற்றும் வெங்காயத்தை வைக்கவும்

அதன் மீது சிறிது இறச்சி வைக்கவும்

அதன் மீதுசிறிதளவு மோஜோ சாஸ் விடவும்

பின்பு ஒரு பன் துண்டை எடுத்து மூடவும்