30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
bigstock anti aging concept portrait o 59321174
சரும பராமரிப்பு

முதுமைப் புள்ளிகள்?

உங்கள் உடலில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றமும் அடுத்தவருக்கு உங்கள் வயதைக் காட்டிக்கொடுத்துவிடும். ஒருவரின் முகம், தலைமயிர் முதலியவற்றைவிட அவனது கையே அவன் வயதை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும்.முதுமைப்புள்ளிகள் என்னும் இந்த கரும்புள்ளிகள் பெரும்பாலோர்க்கு கட்டாயம் வரும். இந்த முதுமைப்புள்ளிகள் நமது தோலிலுள்ள
நிறப்பொருள்கூறின் அதிகரிப்பினால் வருகின்றன.

முதுமைப்புள்ளிளை உங்களால் முற்றிலும் தவிர்க்க இயலாது. எனினும் அவை தெரியாமல் இருப்பதற்கும், எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்கும் சில வழிகள் இருக்கின்றன. நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதற்கு இதோ சில குறிப்புகள்

கரும்புள்ளிகளின் அடர்த்தியைக் குறைக்கலாம்
பிளீச்சிங் கிரீம்களைப் பயன்படுத்தி கரும்புள்ளிகள் பிறர் கண்ணில் தெரியாவண்ணம் அவற்றின் அடர்த்தியைக் குறைக்கலாம். குறைந்த செலவில் இந்த பிளீச்சிங் கிரீமை நீங்களே தயார் செய்யலாம். எலுமிச்சைச்சாறு அல்லது வெங்காயச்சாறினைப் பஞ்சில் தொட்டுக் கரும்புள்ளிகளின் மீது தடவுங்கள். இவ்வாறு ஆறு வாரங்கள் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளின் அடர்த்தி குறையும்.
வைட்டமின் ஒரு சிறந்த நண்பனாகும்
முதுமைப்புள்ளிகளை விரட்டியடிக்க உங்கள் உணவில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ யை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்ட்டியாக்ஸிடண்ட்ஸ் எனப்படும் இந்த வைட்டமின்கள் நமது உடல் மற்றும் சருமத்திலுள்ள உயிரணுக்களுக்குக் கேடு விளைவிக்கும் தீய அணுக்களைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற நார்த்தங்காய்ப் பழங்களிலும், சிவப்பு மற்றும் மஞ்சள் மிளகிலும் அதிகம் இருக்கின்றது.

மருத்துரை எப்போது பார்க்க வேண்டும் ?
முதுமைப்புள்ளிகள் தீமை பயக்காது என்றபோதிலும், அவற்றில் ஏதேனும் மாற்றம் உண்டானால், உடனே மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும். காரணம் அது புற்றுநோயாக இருக்கலாம். புள்ளிகளின் அளவு, நிறம் முதலியவை மாறினாலோ, இரத்தம் கசிந்தாலோ, நமைச்சல் உண்டானாலோ உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். சருமப்புற்றுநோய் ஆபத்தானது என்றபோதிலும் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் அதனைக் குணப்படுத்த முடியும்.

நிழலில் இருங்கள்
முதுமைப்புள்ளிகள் எனப்படும் இப்புள்ளிகள் வயதின் காரணமாக வருவதைவிட சூரிய ஒளியின் காரணமாகவே அதிகம் வருகின்றன.

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களே முதுமைப்புள்ளிகள் வர முக்கியக் காரணமாகும். இக்கதிர்கள் எலும்பு மற்றும் தசை நார்களிலுள்ள புரத்தினை பாதித்து நமது சருமத்திலுள்ள நிறப்பொருள் கூறுகளில் நிரந்தரமான மாற்றத்தை உண்டாக்குகின்றன. அதிகம் நேரம் வெயிலில் அலையாதீர்கள். பகலில் வெளியே செல்லும்பொழுது குடை போன்ற சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.

பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துங்கள்
சூரிய வெப்பத்தைத் தடுக்க கருவி கரணங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் ஈரப்பதம் மிக்க கிரீம் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அதனால்தான் மருத்துவர்கள் காலை நீராடியவுடன் ஈரப்பதம் மிக்க கிரீம்களை பூசிக்கொள்ளும்படி பரிந்துரைக்கின்றனர்.
bigstock anti aging concept portrait o 59321174

Related posts

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

கற்றாழை ஜெல் எப்படி சரும அழகை அதிகரிக்க உதவுகிறது?

nathan

ஆபத்தா…! குளித்தவுடன் வியர்வை வருவது ஏன்?

nathan

அழகழகாய்… அசத்தல் டிப்ஸ்!! அழகு குறிப்புகள்!

nathan

சருமத்தை வெள்ளையாக்க முயற்சிப்போர் செய்யும் தவறுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் விளக்கெண்ணெய்!!!

nathan

குளிர் காலத்தில் சருமம் வறட்சியடையாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்…..

nathan

குறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.

nathan