31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்..சருமத்தில் வரும் கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களை காக்கும் குளியல் பொடி..

வெயில் காலத்தில் சருமத்தில் வரும் கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களை இந்த குளியல் பொடி போக்கும். இன்று இந்த குளியல் பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயிலில் சருமத்தை காக்கும் குளியல் பொடி

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு – அரை கிலோ,

ரோஜா இதழ் – 10 கிராம்,

வெட்டி வேர் – 50 கிராம்

இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும். தினமும் இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

சருமப் பிரச்சனை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு போட்டுக் குளிக்கலாம்.

எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.

பலன்கள்: சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கவர்ச்சியான தோற்றத்திற்கு சில சூப்பர் டிப்ஸ்!!!

nathan

உடலில் உள்ள ரோமத்தை நீக்கும் குளியல் பவுடர்.

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

nathan

முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த அஞ்சறை பெட்டி!…

sangika

வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க…

nathan

முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்

nathan

சரும வறட்சியை போக்கும் பீர் ஃபேஷியல்

nathan

முகத்தில் ஏற்படும் பக்றீரியா பாதிப்பும்… அதனை தடுக்கும் வழிகளும்!

sangika