27.1 C
Chennai
Saturday, May 24, 2025
21 617740c3acd
மருத்துவ குறிப்பு

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

நம்மில் பலருக்கு உருளை கிழங்கு மிகவும் பிடித்த உணவு. கிழங்கு வகை உணவுகளில் மக்கள் அதிகம் உண்ணக்கூடியவை ஒன்றாகவும் உருளைக்கிழங்கு உள்ளது. நாம் வாங்கும் சில உருளைக்கிழங்குகள் சிறிது பச்சை நிறத்தில் காணப்படும்.

இந்த உருளைக்கிழங்குகள் முழுவதும் பச்சையாக இருப்பதில்லை.

நாம் உண்ணும் சாதரண வகை உருளைக்கிழங்குகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாக இருக்கும்.

அப்படி நீங்கள் வாங்கும் உருளைக்கிழங்கில் பச்சை நிறமாக இருப்பின் இந்த பாகங்களை மட்டும் வெட்டி வீசி விடுங்கள்.

 

ஒரு உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் உள்ளது எனில் அது சோலனைன் எனப்படும் நச்சு கலவையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தொழில்நுட்ப ரீதியாக உருளைக்கிழங்கில் அந்த பச்சை நிறத்தை குளோரோபில் கொடுக்கிறது. இந்த நிறமியானது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும் அதை வெட்டி எறிவதே நல்லது.ஏனெனில் இந்த உருளை கிழங்கு சூரிய வெளிச்சத்திற்கு கொண்டு வரும்போது இதில் அதிக அளவு சோலனைன் உற்பத்தி ஆக கூடும். சோலனைன் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை நீங்கள் உட்கொண்டால் அது குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதையே அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது காய்ச்சல், மெதுவான சுவாசம் மற்றும் வயிற்றில் வலி ஆகியவை ஏற்படுகின்றன.

 

 

மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் பயன்படுத்துவது எப்படி?
  1. உருளைக்கிழங்கை வாங்கியவுடன் கழுவ கூடாது.
  2. அவை அழுகும் நிலை உண்டாகலாம். உருளைக்கிழங்கில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதன் இருப்பு நாள் குறைகிறது.
  3. அதிக வெப்பம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டாம்.
  4. உருளைக்கிழங்கு அழுகலாம். அதே நேரம், உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும்.
  5. குளிர்சாதன பெட்டியின் அதிக பட்ச குளிர்ச்சி, உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றம் செய்து விடுகிறது.
  6.  நல்ல தரமான உருளைக் கிழங்கு பல வாரங்கள் கெடாமல் இருக்கும்.
  7. கடையில் அல்லது சந்தையில் இருந்து உருளைக்கிழங்கை வாங்கும்போது, நிறமாற்றம் இல்லாத, உறுதியான, சுருக்கம் எதுவும் இல்லாத உருளைக் கிழங்கை பார்த்து வாங்க வேண்டும்.
  8. எந்த ஒரு வெட்டும் சேதமும் இல்லாத காயாக இருக்க வேண்டும்.
  9. வீட்டில் வளர்க்கப்பட்ட உருளைக் கிழங்கையும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
  10. அழுகிய உருளைக்கிழங்கு துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு மற்ற கிழங்கையும் அழுகச் செய்யும்.

Related posts

சளி, காய்ச்சல் வந்தா இனி மாத்திரை வேண்டாம்… சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல… இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு…

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan

நல்ல கொழுப்பை பெருக்கும் இளநீர்

nathan

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்:

nathan

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..

nathan

‘ரான்சம்’ இணையத் தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு துறையின் அசட்டையா ?

nathan

ஆண்கள் அழகாக இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan