28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
su 300x176
மருத்துவ குறிப்பு

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டது ஏன்?

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?”

“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்னை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்னை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாததுஸ அவசியமானதும்கூட!

சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்னை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.”
su 300x176

Related posts

உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும் தினசரி பழக்கங்கள்!!!

nathan

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்!

nathan

டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெரிகோஸ் வெயினை குணமாக்குவது எப்படி?அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே எடுத்துடுங்க! புற்றுநோயை உண்டாக்குமாம்

nathan