30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 brain
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் அறிவாற்றலை அழிக்கும் விஷயங்கள்!!!

ஒவ்வொருவருக்கும் தனது புத்திசாலித்தனத்தை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் தங்களது புத்திக்கூர்மையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். சமீபத்தில் நிபுணர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் படி, அறிவாற்றலை அழிக்கும் சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளனர்.

அந்த விஷயங்கள் அனைத்துமே சாதாரணமாக நாம் அனைவரும் செய்பவை மற்றும் நாம் அனுபவிப்பவை. இங்கு அறிவாற்றலை அழிக்கும் அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!

அளவுக்கு அதிகமான சர்க்கரை

சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், இடுப்பளவு மட்டும் அதிகரிக்காது, மூளை செல்களையும் அவை பாதிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் 6 வாரங்களாக தொடர்ந்து சர்க்கரை சாப்பிட்டு வந்தவரை சோதித்ததில், அவரது மூளையின் செயல்பாடு குறைந்து, அவரின் கற்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே சர்க்கரை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது

நீங்கள் சிகரெட் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் புகைப்பிடிப்போரின் அருகில் எப்போதும் நின்றவாறே இருந்தால், அது அறிவுத்திறனை பாதிக்கும். அதனால் தான் குழந்தைகள் முன்பு புகைப்பிடிக்க வேண்டாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் சிகரெட் புகையை சுவாசிப்பதால், உடலில் ஆக்ஸிஜனுக்கு பதிலாக கார்பன் மோனாக்ஸைடு அதிகரித்து, அவை மூளை செல்களை பாதித்து, அறிவுத்திறனை அழிக்கும்.

பல வேலைகளில் ஈடுபடுவது

ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டு வந்தால், பலரும் தங்களை மிகுந்த திறமை வாய்ந்தவராக கருகின்றனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதால், எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போவதோடு, அறிவுத்திறனை குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன்

உடல் பருமனால் தற்போது பலரும் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் ஏற்பட்டால், ஞாபக மறதி மற்றும் புலனுணர்வு குறைபாடு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மூளையில் உள்ள நியூரான்களின் தொடர்பை குறைக்கும். அதுவே அதிகமானால், மூளையில் செயல்பாடு மோசமாகி, நாளடைவில் ஞாபக மறதியை ஏற்படுத்திவிடும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், அதிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

Related posts

தனிமை விரும்பியா நீங்கள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன?

nathan

பெண்களே கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்க இதை மறக்காதீங்க…

nathan

புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்

nathan

காதலியை நினைத்துக்கொண்டு மனைவியுடன் வாழும் ஆண்கள்

nathan

ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!

nathan

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

nathan