குஜராத்தில் சிறுமி ஒருவர் வினோத நோய் காரணமாக முடியினை சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது அரைகிலோ முடி வயிற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் காட் டாட் சாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவரது தாய் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், தந்தை கடந்த ஆண்டில் இறந்துள்ளார்.
குறித்த சிறுமி சில தினங்களாக சாப்பிட மறுத்துள்ள நிலையில், உடல் எடையும் குறைந்து காணப்பட்டதால் மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருப்பதாகவும், அறுவைசிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பின்பு அரசு மருத்துவமனை மூலமாக அறுவை சிகிச்சை செய்து முடி உருண்டை அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இவ்வாறு குறித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து முடி உருண்டை எடுத்ததாகவும், தற்போத இரண்டாவது முறையாக அகற்றப்பட்டுள்ளது.
ட்ரைக்கோபெசோவர் என்ற அரியவகை குறைப்பாட்டின் காரணமாக சிறுமி இவ்வாறு மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் முடிகளை சேகரித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். முதல் அறுவை சிகிச்சைக்கு பின்பு மனநல சிகிச்சை அளிக்காமல் விட்டதால், தற்போதும் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது சிறுமிக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் மன அழுத்தத்திற்கு காரணம் பின்னரே தெரியவரும் என்று கூறியுள்ளனர்.