27.1 C
Chennai
Saturday, May 24, 2025
ginge
பழரச வகைகள்

லெமன் பார்லி

தேவையான பொருட்கள்:

பார்லி – 1/4 கிலோ
எலுமிச்சம்பழம் – 2
மாங்காய் இஞ்சி – 50 கிராம்
உப்பு – 2 சிட்டிகை
சர்க்கரை – 100 கிராம்
(டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸீக்கு ஒரு டேப்ளட்)

செய்முறை:

பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக gingeஇருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.

டயட்

இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும். பார்லியில சிறுநீரக பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கிற வல்லமை இருக்கு. எலுமிச்சம் பழத்துல “சி” விட்டமின் இருக்கு. டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள எலுமிச்சம்பழம் ரொம்பவும் துணைபுரியுறதா தற்போதைய மருத்துவ ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. ப்ளட் பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தது.
ginge

Related posts

தேசிக்காய் தண்ணி

nathan

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா?….

sangika

மோர்: குளிர்ச்சிக்கு மட்டுமல்ல..

nathan

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

nathan

எளிமையான ஆரஞ்சு கீர்

nathan

கேரட் – பாதாம் ஜூஸ்

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan