28.6 C
Chennai
Tuesday, Oct 1, 2024
04 tomato curry
சைவம்

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

தக்காளி குழம்பை பல ஸ்டைலில் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பானது வித்தியாசமான செய்முறையை கொண்டிருப்பதுடன், அதன் சுவையும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும் இந்த செய்முறையும் ஈஸியாகத் தான் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் சுவைத்து சாப்பிடும் படி இருக்கும்.

குறிப்பாக இந்த தக்காளி குழம்பானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Kerala Style Tomato Curry Recipe
தேவையான பொருட்கள்:

தக்காளி – 4 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை வாணலியில் உள்ள தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!!!

Related posts

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

சுவையான காலிபிளவர் – பட்டாணி குருமா

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan