o kids need sunlight3
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…விட்டமின் டி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி பிடிக்காதா?

பருவநிலை மாறும் இந்த நேரத்தில் பல தொற்றுக்களை உண்டாக்குகிறது. எனவே இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி சுகாதார பழக்கவழக்கங்களையும் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

பல மருத்துவ ஆய்வுகளில் குழந்தைகளுக்கு இந்த மழைக்காலத்தில் விட்டமின் டி உணவுகளை அதிகமாகவோ, சரியான அளவிலோ கொடுத்தால், சளி பிடிக்காது என நினைத்துக்கொண்டிருப்போம். இது சரியா, தவறா என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

விட்டமின் டி உணவுகள்
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சூரியனிடம் இருந்து கிடைக்கும் விட்டமின் டி சரியான விகிதத்தில் கிடைக்காது என்பதற்காக முட்டை, விதைகள் போன்ற விட்டமின் டி உணவுகளை அதிகமாக கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்றவை வருவதை தடுக்கலாம் என முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

ஆனால் விட்டமின் டி உணவுகளை அதிகமாக கொடுத்தாலும் கூட சளி காய்ச்சல் உண்டாவதை தடுக்க முடியாது என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மழைக்காலத்தில் இவ்வாறு ஏற்படுவது இயல்பு தான் எனவும் மருத்துவர் குழு தெரிவிக்கிறது.

இந்த மாதம்!

செப்டம்பர் மற்றும் மே மாதங்கள் மழை பொழியக்கூடிய மாதங்கள். எனவே இந்த மாதங்களில் குழந்தைகளை சுகாதாரமாக பார்த்துக்கொள்வது அவசியம். மழைக்காலத்தில் கிருமிகள் நீரின் மூலம் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

விட்டமின் டி குறைபாடு

விட்டமின் டி குறைபாடு இருந்தால், தூக்கம் வராது, எலும்புகள் எளிதில் உடையக்கூடும். மூட்டு வலிகள் உண்டாகும், பதட்டம் டென்ஷன் ஆகியவை உண்டாகும்.

எண்ணெய் மீன்கள்

நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘டி’யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80% பூர்த்தி செய்துவிடும்.

முட்டை

முட்டைகளிலிருந்தும் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி’யைப் பெறலாம்.

Related posts

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

nathan

நாப்கின் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியவை

nathan

முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்

nathan

சிறுநீரக செயல்பாட்டை சீர்செய்ய உதவும் உணவு முறைகள்!

nathan

பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்

nathan

உங்களுக்கு மாத்திரை எதுவும் போடாமல் குடலை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

nathan

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

nathan