27.1 C
Chennai
Saturday, May 24, 2025
21 6169ed4
அழகு குறிப்புகள்

சுவையான சப்பாத்தி வெஜிடபுள் நூடுல்ஸ்

குழந்தைகள் விரும்பி உண்ண மீந்து போன சப்பாத்தியை வைத்து அருமையான சப்பாத்தி வெஜிடபுள் நூடுல்ஸ் ரெசிபியை செய்து கொடுக்கலாம். \

தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 4

முட்டைக்கோஸ் – 1/4 கப்

கேரட் – 2

குடைமிளகாய் – 1 சிறியது

பூண்டு – 5 பற்கள்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை விளக்கம்

முதலில், முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்தாக பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி!..

 

Related posts

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

முதுகுக்கும் உண்டு அழகு

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

அரங்கேறிய துயரம்! அண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை!

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

கைகள் பராமரிப்பு

nathan

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

nathan