36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

புதினா பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கப்,
புதினா, கொத்தமல்லி தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தக்காளி – 4,
பட்டை – ஒரு துண்டு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

• புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

• குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டையை போட்டு வறுக்கவும். அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள்தூள் போட்டு கிளறவும்.

• இதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, உப்பு போட்டு கலந்து மூடிவிடவும்.

• 2 விசில் வந்ததும் இறக்கவும்.

• பிறகு நெய் விட்டு கலந்து பரிமாறவும்.

• சுவையான புதினா பிரியாணி ரெடி.

Related posts

சூப்பரான மாங்காய் புலாவ் செய்யலாம் வாங்க…

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

முருங்கைப்பூ கூட்டு

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

nathan

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

nathan

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

சூப்பரான பன்னீர் – பச்சைப்பட்டாணி குருமா

nathan