amil
மருத்துவ குறிப்பு

ஞாபக மறதி பிரச்சனையால் அவதியா? மேம்படுத்த இதை சாப்பிடுங்கள்

ஞாபக மறதி பிரச்சினையால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர்.

எடுத்துகாட்டுக்கு கையில் வைத்திக்கும் ரிமோட், செல்போனை வீட்டில் எங்கேயோ வைத்துவிட்டு அதை மணிக்கணக்கில் நாம் பலரும் தேடியிருப்போம்.

ஞாபக மறதிக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சில முக்கிய உணவுகளை சேர்க்க வேண்டும் என டயட்டீஷியன் மேக் சிங்கின் கூறுகிறார்.

கீரைகள்

கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் மெக்னீசியம் மற்றும் ஃபோலேட்டின் வளமான ஆதாரங்களில் ஒன்றாக கீரை இருப்பதால், நமது நினைவாற்றலை பராமரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தயிர்

தயிர் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் யுசிஎல்ஏ நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தயிரில் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது. எனவே, உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தினமும் தயிர் சாப்பிடலாம்.

மீன்

மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முட்டை

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்!!!

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் இருக்காங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

Healthy tips.. தொண்டைப்புண், தொண்டை வலிக்கு முக்கிய தீர்வு.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாயின்போது கருத்தரிக்க ஏற்ற காலகட்டத்தை எப்படி கண்டுபிடிக்கலாம்?

nathan

இதயநோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஒற்றை தலைவலி என்றால் என்ன?

nathan

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுவது ஏன்?

nathan