சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நெயில் பாலிஷ் ஏற்படுத்தும் விபரீதம் என்னென்ன தெரியுமா?

நெயில் பாலிஷை கை மற்றும் கால் விரல்களின் நகங்களை கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.

அதிலும், அதில் வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை.

ஆபத்துகள்
நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும்.

மேலும், அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை. இவை நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.

தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.

இதனைத்தொடர்ந்து நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது.

மேலும், தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும். டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது.

இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.

Related posts

வேனிட்டி பாக்ஸ் வாக்சிங்tamil beauty tips

nathan

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க காரட்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

இயற்கையாக மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க 10 எளிய வழிகள்

nathan

உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்திற்கு வாரம் ஒருமுறை இதை செய்தால் போதும் முயன்று பாருங்கள்!

nathan

பளபள தோலுக்கு பாதாம்

nathan

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

beauty secrets from grandma – பாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள்

nathan

வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க…

nathan