29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
f41c7aab a1c3 45d3 a873 9e2163ad9dfb S secvpf
உடல் பயிற்சி

உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான உடற்பயிற்சிகள்

1. அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises) : இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி டெனிஸ், தற்காப்பு கலைகள்(martial arts ), வேகமான நடனம் போன்றவை) ஆனால் நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டெனிஸ், சைக்கிள் ஓட்டம் போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஓரிரு நாட்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதை விட வாரத்தில் 5 முதல் 7 நாட்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது. கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.

2. தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training) : இவற்றை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது செய்ய வேண்டும். உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை. யோகாசனமும் இவ்வகையைச் சேர்ந்ததே.

எனவே, சிறிய அளவிலான உடற்பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும். எடையையும் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.
f41c7aab a1c3 45d3 a873 9e2163ad9dfb S secvpf

Related posts

தொப்பையை குறைக்கும் 2 முத்தான பயிற்சிகள்

nathan

முதியவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை

nathan

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி!…

sangika

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்

nathan

கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க…

sangika

இடுப்பின் பக்கவாட்டு கொழுப்பை கரைக்க உதவும் பயிற்சிகள்

nathan

எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

nathan

இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைக்கும் பயிற்சி

nathan