அன்றாட வாழ்க்கையில் சமையலுக்கு பயன்படுத்த பொருள்களில் ஒன்று கொத்தமல்லி. இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மருத்துவகுணம் கொண்ட இந்த கொத்தமல்லிக்கு கொரோனா பெரும்தொற்று காலத்தில் சிறந்த மருந்தாக செயல்பட்டது.
இதில் இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தினமும் சமையலில் பயன்படுத்துகிறோம். சரி வாங்க கொத்தமல்லி நீண்ட நாள் அழுகாமல் இருக்க என்ன செய்வது குறித்து பார்க்கலாம்.
வழிமுறைகள்:-
கடைகளில் வாங்கிய கொத்தமல்லி இலைகள் வதங்காமல் இருக்க முதலில் கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு பிளாஸ்டிக் டப்பாவினை எடுத்துக்கொண்டு அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீரினை ஊற்றவேண்டும். பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றிய தண்ணீருக்குள் கொத்தமல்லி கட்டின் வேர் மட்டும் படும் படி உள்ளே வைக்க வேண்டும்.
டப்பாவில் ஊற்றியத் தண்ணீரினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் செய்ய வேண்டும்.
ஒரு வேளை வீட்டில் பிரிட்ஜ் இல்லையென்றால் இதனை வெளியில் அப்படியே வைத்து விட்டால் ஒரு வாரத்திற்கு கொத்தமல்லி இலைகள் கெடாமல் பிரஷாகவே இருக்கும்.
பிரிட்ஜில் வைக்கும் போது கொத்தமல்லி வைத்துள்ள டப்பாவினை பிளாஸ்டிக் பேப்பரினைக்கொண்டு காற்றுப்புகாதப்படி கட்டி வைத்துக்கொண்டு உள்ளே வைக்க வேண்டும்.