28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
29 bhelpurisandwichrecipe
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பேல் பூரி சாண்ட்விச்

பொதுவாக காலையில் பேச்சுலர்கள் எதுவும் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் காலையில் எழுந்ததும் வியர்வை வழிய சமையலறையில் யார் சமைப்பது என்பதால் தான். அதனால் தான் இன்றைய பேச்சுலர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு மிகவும் முக்கியமான காலை உணவை உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை போக்கலாம்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பேச்சுலர்கள் காலையில் செய்து சாப்பிடக்கூடியவாறான ஒரு அருமையான சாண்ட்விச் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அதற்கு பெயர் பேல் பூரி சாண்ட்விச். இந்த சாண்ட்விச்சை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம். சரி, இப்போது அந்த பேல் பூரி சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Bhel Puri Sandwich Recipe
தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – தேவையான அளவு
அரிசி பொரி – 100 கிராம்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
புதினா சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
மிக்ஸர்/ஓமப்பொடி – தேவையான அளவு

புதினா சட்னிக்கு…

புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் புதினா சட்னியை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள பேல் பூரியை சிறிது வைத்து, அதற்கு மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து பரிமாறினால், பேல் பூரி சாண்ட்விச் ரெடி!!!

Related posts

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

nathan

வெஜ் சாப்சி

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

சோயா தட்டை

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

இலந்தை பழ வடாகம்

nathan

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan