மதிய உணவின் போது சைடு டிஷ்ஷாக பொரியலில் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியென்றால் புடலங்காய் பொடிமாஸ் செய்யுங்கள். இந்த புடலங்காய் பொடிமாஸ் செய்வது மிகவும் சிம்பிள். இதனை 10 நிமிடங்களில் செய்துவிடலாம்.
இங்கு அந்த புடலங்காய் பொடிமாஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
Snake Gourd Stir Fry
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
பிரியாணி இலை – 1
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 3
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை நன்கு கழுவி காய்கறியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் புடலங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
காய்கறியில் உள்ள நீரானது வற்றி வெந்த பின், அதில் முந்திரியை லேசாக பொடி செய்து சேர்த்து, அத்துடன் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், புடலங்காய் பொடிமாஸ் ரெடி!!!