35.8 C
Chennai
Thursday, May 29, 2025
mil 6
Other News

தெரிஞ்சிக்கங்க…உருளைக்கிழங்கு சமைக்கிறதுக்கு முன்னாடி ஏன் 30 நிமிஷங்கள் தண்ணீரில் ஊறவைக்கணும் தெரியுமா?

நவீன அறிவியல் ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் வாழ்க்கை முறையில் சில சிக்கல்களை உண்டாக்கவே செய்கின்றன.

அதற்கு சிறந்த உதாரணம் குளிர்சாதன பெட்டி. உணவை சேமிக்கவும், உணவு வீணாகாமல் தடுக்கவும் இவை உதவுகிறது. ஆனால் குளிர் வெப்பநிலையில் இருக்கும் இது உடல் நல பிரச்சனைகளையும் உண்டு செய்கிறது.

குறிப்பாக அதில் பதப்படுத்தப்படும் சில காய்கறிகளால் என்று சொல்லலாம். ஃப்ரிட்ஜூக்குள் என்ன மாதிரியான காய்கறிகளை வைக்க கூடாது என்பதை பார்த்திருக்கிறோம். அதில் உருளைக்கிழங்கும் ஒன்று.

ஏன் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் உருளைக்கிழங்கு வைக்க கூடாது இதை ஏன் தண்ணீரில் ஊறவைத்து சமைக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஃப்ரிட்ஜ்ஜில் சேமித்து வைக்க கூடாத காய்கறிகளில் உருளைகிழங்கும் ஒன்று. இதை ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைக்கும் போது அதிக குளிர்ந்த வெப்பநிலை உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றும்.
இந்த சர்க்கரை மேலும் வினைபுரிந்து பல்வேறு வகையான புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான இரசாயனத்தின் தூண்டுதலை விளைவிக்கிறது. அதனால் தான் உருளைக்கிழங்கை எப்போதும் அறைவெப்பநிலையில் மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

உணவு தர நிறுவனம் நடத்திய ஆய்வின்படி உருளைக்கிழங்கில் உள்ள அமினோ அமில அஸ்பாரஜின் உடன் உருளைக்கிழங்கின் சர்க்கரை அடக்கம் கலக்கப்படுகிறது அல்லது பொரித்தவுடன் கலக்கப்படுகிறது. அல்லது இது பொரிக்கப்படும் போது அக்ரிலாமைடு என்னும் வேதிப்பொருளை தூண்டுகிறது. இது உடலுக்கு நன்மை செய்யகூடியதல்ல.
இந்த அக்ரிலாமைடு என்பது அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி மாவுச்சத்துள்ள உணவில் இருக்கும் ஒரு வேதிப்பொருள்.
இதை வறுக்கும் போதும் பேக்கிங் செய்யும் போது அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது இந்த ரசாயனம் வெளிப்படுகிறது. அக்ரிலாமைடு என்பது காகிதம், சாயங்கள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள்.
​உருளைக்கிழங்கை பதப்படுத்துவது எப்படி?

உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் உலர்ந்த இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பரிந்துரைக்கிறது.

உருளைக்கிழங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு. அதே நேரம் இதை சரியாக பயன்படுத்துவதும் முக்கியம். உருளைக்கிழங்கு தனியாக அறைவெப்பநிலையில் மற்ற காய்கறிகளுடன் ( வெங்காயம் ) சேர்க்க கூடாது. அப்படி செய்தால் அது முளைகட்டி விடும்.

சமயங்களில் கிழங்கில் ஆங்கானே பச்சை நிறம் போன்ற புள்ளிகள் இருக்கும். இவை இரண்டுமே பயன்படுத்தக்கூடாது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புண்டு.

​உருளைக்கிழங்கை எப்படி சமைப்பது?

உருளைக்கிழங்கு சமைப்பதற்கு முன் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அப்படி செய்தால் சமைக்கும் போது அக்ரிலாமைடு வேதிப்பொருள் உருவாவதற்கான வாய்ப்புகள் நன்றாகவே குறைகிறது.

அதிக வெப்பநிலையில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும். ப்ரெஞ்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுவல் போன்றவற்றை செய்யும் போது அதிக வெப்பநிலையில் சமைக்க கூடாது. மேலும் அவை அடர்ந்து இருக்க வேண்டும். இது அதிலிருந்து வெளிப்படும் அக்ரிலாமைடு அளவு குறைக்க செய்யலாம்.

Related posts

காதலனை அழைத்த 11ம் வகுப்பு மாணவி..வீட்ல யாருமில்லை…

nathan

மாதவிடாய் இரத்தம் குறைவாக வந்தால்

nathan

மீண்டும் இணையும் துள்ளாத மனமும் துள்ளும் கூட்டணி!

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan

செவ்வாய் பெயர்ச்சி-நிதி நிலையில் வெற்றி கிடைக்கும் ராசிகள்

nathan

பெண் வேடமிட்டு தேர்வு எழுத வந்த நபர்- கையும், களவுமாக பிடிபட்டார்

nathan

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

nathan

காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்ற ரஜினி

nathan

Candace Cameron Bure, Lori Loughlin and Other Celebs That Are Totally BFFs

nathan