mil 5
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் நின்ற பெண்களின் உடல் பிரச்சனையும்… டான்ஸ் தெரபியும்…

Courtesy: MalaiMalar மாதவிடாய் நின்ற பிறகு, எடை அதிகரிப்பு, ஒட்டுமொத்தமாக உடலில் கொழுப்பு அதிகரிப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறு போன்ற பிரச்சினைகளை பெண்கள்

அனுபவிக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் இறுதியில் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. நடனம் ஆடுவதன் மூலம் கொழுப்பு

அளவை திறம்பட குறைக்கலாம். உடல் அமைப்பை மேம்படுத்தலாம் என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பெண்கள் பெரும்பாலும் குறைந்த உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மாதவிடாய் நின்ற பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை

எதிர்கொள்கிறார்கள். மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். இந்த நிலையில் மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை

எதிர்கொள்ளும் பெண்களின் உடல் அமைப்பு, சுய மரியாதை உணர்வு, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி போன்றவற்றுடன் நடன பயிற்சியை ஒப்பிட்டு ஆய்வு

மேற்கொள்ளப்பட்டது.

வாரத்திற்கு மூன்று நாட்கள் நடன பயிற்சி மேற்கொள்ளுமாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களிடம் அறிவுறுத்தப்பட்டது. நடன சிகிச்சை அதாவது டான்ஸ்

தெரபி மேற்கொண்ட பிறகு உடல் சமநிலை, நடை, உடல் வலிமை என ஒட்டுமொத்த உடல் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆய்வில்

தெரியவந்துள்ளது.

“இந்த ஆய்வு வாரத்திற்கு மூன்று முறை நடனம் போன்ற எளிமையான செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது. நடன பயிற்சி மாதவிடாய் நின்ற பெண்களின்

உடற்தகுதி, உருவத்தை மாற்றுகிறது’’ என்பது ஆய்வு குழுவினரின் கருத்தாக இருக்கிறது.

Related posts

காது குடையும் பழக்கம் நல்லதா?

nathan

தேமலுக்கு இயற்கை மருத்துவம்

nathan

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா?

nathan

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை

nathan

சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா புற்று நோய்களிலிருந்து மனிதரைக் காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!!

nathan

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

nathan