சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
குறித்த பிரச்சினையை நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு வீட்டு வைத்தியம் என்ன என்பதை இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்
அதிமதுரம் – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
சித்ரத்தை – 10 கிராம்
முசுமுசுக்கை இலை – 10 கிராம்
செய்முறை:
முதலில் 100 மில்லி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான நெருப்பில் வைத்து நன்றாக காய்ச்சவும்.
நீர் நன்றாக கொதித்ததும், முதலில் அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை, முசுமுசுக்கை இலை இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பொருளையும் போட்ட பின்பு சில நொடிகள் கொதித்த பின்பு அடுத்த பொருட்களை சேர்க்க வேண்டும்.
நன்றாக 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, சல்லடையினால் வடிகட்டுக்கொள்ளவும். தற்போது நெஞ்சு சளியை நிரந்தரமாக போக்கும் கசாயம் தயார்.
அருந்தும் முறை:
குறித்த கசாயத்தினை நெஞ்சுச் சளி இருப்பவர்கள் காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளில், 30 முதல் 50 மில்லி வரை எடுத்துக்கொண்டு, சாப்பாப்பிடிற்கு பின்பு அருந்த வேண்டும்.
தொடர்ந்து இதனை செய்து வந்தால், நெஞ்சு சளி கரைவதோடு, எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.