31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?

பார்லரில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் மில்கையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில் தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும். கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும். மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஆடவோ, அசையவோ கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம் பாதிக்கப்படும்.

மற்றவர்களுடன் பேசக்கூடாது.
மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்தோ துடைக்கவேண்டும்.

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்
பிரட் மாஸ்க் : ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பிரட்டை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.

பாதாம் மாஸ்க் : மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் மறையும்.

Related posts

இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs

nathan

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

nathan

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

nathan

தக்காளி பேஷியல்

nathan

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கிடும் குங்குமப் பூ!சூப்பர் டிப்ஸ்

nathan

கோடைகால சருமத்தை பாதுகாக்க ஆண்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் போதும்…!

nathan