31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

மனைவிக்கு தெரியாமல் அவரின் தங்கையான மச்சினியை 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்!

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல் அவரின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் – ரம்யா தம்பதியினருக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரியான லோகநாயகிக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது மனைவி ரம்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ரம்யா-வை தொடர்புகொண்ட கணேஷ் உனது தங்கையை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து தனது தங்கையை திருமணம் செய்து வைக்குமாறு தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், தனக்குத் தெரியாமல் தங்கையை இரண்டாவது திருமணமும் செய்துவிட்டதாக ரம்யா மீண்டும் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கணேஷ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கணேஷ் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

இப்படி ஒரு அபார சக்தியா.?இரத்த அணுக்களை உருவாக்கும், பீட்ரூட்டில் !

nathan

தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதில் உடலுக்கு இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்!…

sangika

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan

முக அழகை‌ப் பேணுவது அவ‌சிய‌ம் !

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! சட்டப்படி விவாகரத்து…

nathan

தங்கர் பச்சான் சரமாரி கேள்வி – பணம் போட்டவரையும் சந்திக்க மாட்டாரு, ரசிகர்களையும் சந்திக்க மாட்டார்?+

nathan