33.1 C
Chennai
Saturday, Jul 12, 2025
08 kerala paruppu
சமையல் குறிப்புகள்

சுவையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

திங்கட்கிழமை வந்தாலே பலருக்கு என்ன சமைப்பதென்றே தெரியாது. அப்படி நீங்கள் இன்று என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு செய்யுங்கள். இந்த ரெசிபி மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஈஸியானதும் கூட. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Kerala Style Dal Curry
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 5 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதனை குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் விசில் போனதும், குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு நன்கு மசிக்க வேண்டும்.

பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பருப்பை வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பருப்பில் இருந்து தேங்காய் வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

இறுதியில் அதனை பருப்பில் ஊற்றி, சிறிது நெய் சேர்த்து கிளறினால், கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!!

Related posts

முட்டை பொடிமாஸ்

nathan

மொஸரெல்லா சீஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..?

nathan

மலபார் மட்டன் ரோஸ்ட்

nathan

சுவையான கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

nathan

கத்திரிக்காய் கார குழம்பு – kathirikai kara kulambu

nathan

பன்னீர் புர்ஜி சாண்ட்விச்

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

சுவையான காளான் மக்கானி

nathan

எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?தெரிந்துகொள்வோமா?

nathan