26.8 C
Chennai
Monday, Nov 18, 2024
north
அழகு குறிப்புகள்

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தங்கள் பாணியிலே கொரோனாவை எதிர் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் உலக நாடுகளே கதிகலங்கிக் கொண்டிருந்த போது, தங்கள் நாட்டில் கொரோனா பரவலே இல்லை என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், சீனாவிற்கு அருகில் வட்கொரியாவில் எப்படி கொரோனா பரவல் இல்லாமல் இருக்கும், உண்மையை மறைப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், ஐ.நா., சபை தான் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வந்தது. ஆனால் வடகொரியாவோ அதை நிராகரித்துவிட்டது.

தங்களுக்கு தருவதாக இருந்த சீனத் தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை, மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவற்றை மடைமாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ராஜெனிகா மருந்தை வாங்குவதையும் வடகொரியா தாமதப்படுத்தி வருகிறது.

சீனா தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், வேறு தடுப்பூசிக்காக வடகொரியா காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கொரோனா நோய்த் தடுப்பில் நாம் இப்போது பின்பற்றி வரும் நடவடிக்கைகளில் சிறிதளவும் கூட தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்து தேசிய எல்லைகள் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கு கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். நாம் நமது பாணியிலேயே கொரோனாவைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Related posts

இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! முகப்பருக்களை முற்றிலும் நீக்க

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

நெய்யை நம்முடைய சருமத்தின் அழகை மெருகூட்ட எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!…

sangika

அழகான சருமத்தை பெற அழகு குறிப்புகள்…!

nathan

நம்ப முடியலையே…அறந்தாங்கி நிஷாவின் குழந்தையா இது? கொள்ளை அழகில் ஜொலிக்கும் சஃபா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும்?

nathan