26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
large napkin
மருத்துவ குறிப்பு

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் ! ஓர் எச்சரிக்கை செய்தி!!

Courtesy: Dinamani

பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம்.

நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்து விடுவார்கள்.

அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?

இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.

சரி வாருங்கள். இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாப்கின் மூலப்பொருள்
கச்சா எண்ணெய் (petroleum product)
குப்பை காகிதங்கள்
பழைய அட்டைகள்
மரக்கூழ் நெகிழி (plastic)
பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி நறுமணப்பொருட்கள் (Fragrances)

பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே சென்சிடிவ் ஆன பகுதியில் வைக்கிறீர்கள்.

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது?
நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton என்று நினைக்கறீங்களா ?

அதுதான் இல்லை. பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில ரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள்.

பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான ரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள். இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும்.

வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை. இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள் CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.

இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக் கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் ரசாயனத்தை கலப்பார்கள்.

இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும். எந்தளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது.

இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள். பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள்.

அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத் தாண்டி வெளி வராது. மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற ரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது.

வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, இன்னும் பல ரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layerகளும் தயாராகிறது.

பிறகு இந்த மூன்று layerகளும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது.

பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.

அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process-ன் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.

DIOXIN என்னும் மிகக் கொடிய நஞ்சு. எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு செல்லினுடைய NUCLEUS-ற்குள் நுழைந்து DNA sequence-ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும்?

Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது.

மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது. பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.

இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance) சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது

இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
தைராய்டு (Thyroid)
கல்லீரல் வேலையில் மாறுபாடு
ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு வெள்ளைப்படுதல் தோல் நோய்கள்
Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
நீரிழிவு (DIABETS)
மன அழுத்தம் (Depression)
கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
குழந்தையின்மை (Fertility problems)
மார்பக புற்றுநோய் (breast cancer)
கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது. நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை.

பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்??? அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKINதான்.

Related posts

வைட்டமின் மாத்திரைகளை எடுக்கிறீா்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!

nathan

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்

nathan

அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ் இந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…

nathan

அதிகரிக்கும் தற்கொலைகள்… காரணமாகும் மனஅழுத்தம்… விரட்டியடிக்கும் திறவுகோல் எது?

nathan

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆவாரை! சூப்பர் டிப்ஸ்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

nathan